கோவிங்க

அடப் போங்க! நான் ரொம்ப கோபமா இருக்கேன்!!!

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

தொலைவிலிருந்தே பேச : 9489690248

Thursday, December 02, 2004

பின்னூட்டக் கோபம் தொடர்ச்சி

பிராம்மனியத்தைப் பற்றி கதறும் இவர் எவ்வளவு பெரிய ஜாதி வெறியர், என்பதை தனது எழுத்திலேயே காட்டிவிட்டார். வலைப்பதிவாளர் பிராம்மனியத்தை, தனது பதிவுகளில் நுழைப்பவராகவே(ஒரு பேச்சுக்கு) இருக்கட்டும். அவர் தனது சொந்தப் பதிவில்தானே அதை செய்கிறார். பின்னூட்டமிட்டவரைப் போல் அடுத்தவர் பதிவில் போய் சம்பந்தமேயில்லாமல், தனது ஜாதி வெறியை நுழைக்கவில்லையே. எதை எதைத்தான் ஜாதிவெறியோடு பார்ப்பது, எங்கேதான் ஜாதியை நுழைப்பது என்ற விவஸ்த்தையே இல்லையா?
"இவ்வளவு பேசுகிறாயே? நீயும் அவாளா?" என்று என்னைக் கேட்டாலும் கேட்பார். இப்பொழுதே பதில் சொல்லிவிடுகிறேன். நான் அவாள் இல்லை.

"மாதவன், அரவிந்த்சாமியைப் பற்றி குறிப்பிட்டவர், ஏன் விக்ரம், விஜய்யைக் குறிப்பிடவில்லை?" என்று கேட்கிறார். இந்தக் கேள்வி உங்களுக்கே சின்னப்பிள்ளைத்தனமாய் இல்லை?எல்லோருடைய விருப்பங்களும், ரசனைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும், இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் ஓழிய இப்படி ஒரு கேள்வி எழாது. வலைப்பதிவாளரின் ரசனைக்கு மாதவனையும், அரவிந்தசாமியையும் பிடித்திருக்கிறது, அதனால் அவர் அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் கேள்வி விக்ரம், விஜய்யை ஏன் அவருக்கு பிடிக்கவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு பிடித்த யாரையாவது பற்றி எழுதாமல் இருந்தால் கூடவா தப்பு? எனக்குகூடத்தான் நடிகர் விவேக்கை பிடிக்கும். அதற்காக இந்தப் பதிவில் போய் "கமலைக் கொண்டாடும் நீங்கள் ஏன் விவேக்கை கொண்டாட மறுக்கிறீர்கள்?" என்று நான் கேட்கலாமா?

கமலைக் காமசகாப்தம் என்கிறார். நடிகைகளைத் தள்ளிக்கொண்டு போகிறார் என்கிறார். இதைப் பற்றியெல்லாம் வலைப்பதிவாளர் பேசவே இல்லையே! கமலின் நடிப்புத் திறமையைப் பற்றித்தானே பேசியிருக்கிறார். பின்னூட்டம் இடுவதற்கு முன்பு பதிவில் எந்த விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறது என்ற தெளிவிற்கு வாருங்கள்.முதலில் பிரபலமானவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டிப்பார்க்கும் அநாகரிகத்தை விட்டொழியுங்கள்.

பெயரை மட்டும் அழகாக வைத்துக் கொண்டால் போதாது, வலைப்பதிவு எழுதுவதற்கு. ரொம்ப கோவமா இருக்கேன். அப்புறமா வாரேன்.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.

பின்னூட்டக் கோபம்

என்னடா கொஞ்ச நாளா கோபமே வரலையேன்னு பார்த்தேன். இந்த வாரம் Dondus dos and donts பதிவிலிருந்து போனச் சுட்டிக்குப் போய் பார்த்தபொழுது, உடம்புக்கு மேல(அதென்ன எப்பம்பாத்தாலும் மூக்குக்கு மேல) கோவம் வந்துட்டுது. அங்க ஒரு பின்னூட்டப் போரே நடந்திருந்தது. அந்தப் பதிவை முன்பே படித்திருந்தேன். ஆனால் அதற்கு வந்த பின்னூட்டங்களை படிக்கும் பாக்கியம்(?!?!) நேற்றுதான் கிடைத்தது. வலைப்பதிவாளர்(கமலைப் பற்றி) அவரது கருத்தைக் கூறியிருந்தார்.

அவரது கருத்தில் ஒரு பின்னூட்டவாதி சூப்பரா ஒரு தப்பு கண்டுபிடிச்சிருக்கார். வலைப்பதிவாளர் கமலை மகா சகாப்தம் என்று சொல்லி விட்டார். பின்னூட்டவாதியின் கருத்து கொஞ்சம்தான் மாறுதல், அதாவது கமல் ஒரு காம சகாப்தம். அதற்கு அவர் அத்தாட்சிக்கு கமலின் அண்டர்வேர்வரைப் போய்விட்டார். இந்த அளவுக்கு தனி மனித விமர்சனங்கள் வருவதைப் பற்றித்தான் போன துணுக்கிலேயே கூறியிருந்தேன். அவரது கோபத்துக்கு காரணம் என்னவென்று பார்த்தால், கமல் ஒரு பார்ப்பனராம். பதில் சொல்பவர்களையெல்லாம் 'நீங்கள் அவாளா?' என்று கேட்கிறார். அவாள் என்பதற்காகத்தான் வலைப்பதிவாளர் அந்தப் பதிவையே போட்டிருக்கிறார் என்கிறார். பாவம் அவருக்கு பதில் சொன்னவரும் அவாளாகப் போய் விட்டார். விட்டு வாங்கியிருக்கிறார்.

அவர் சொல்கிறார், ஜாதிப்பற்று காரணமாக பிராம்மனியத்தை வலுக்கட்டாயமாக வலைப்பதிவாளர், இந்த மாதிரி பதிவுகள் எழுதி நுழைக்கிறாராம். விக்ரமும், விஜய்யும் அவாள் இல்லை என்பதால்தானே அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்கிறார். அவாள், அவாள் என்று கதறுகிறார்.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.
>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
Free Counter Weblog Commenting and Trackback by HaloScan.com