கோவிங்க

அடப் போங்க! நான் ரொம்ப கோபமா இருக்கேன்!!!

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

தொலைவிலிருந்தே பேச : 9489690248

Wednesday, October 19, 2005

நீங்க என்ன நினைக்கிறீங்க?

பிரபஞ்சத்தில் எல்லாமே ஒழுங்கிலிருந்து, ஒழுங்கின்மையை நோக்கி செல்கின்றன.

வலைப்பதிவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.

Monday, January 10, 2005

குழந்தை வளர்ப்பு

நேற்றும் அதற்கு முன் தினமும், சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு நண்பனுடன் சென்றிருந்தேன். பெரிய கண்காட்சி, பல புத்தகங்கள், பல பதிப்பகங்கள். அவ்வளவையும் பார்க்க ஒரு நாள் போதவில்லை. வருடத்துக்கு ஒரு முறை என்பதால் சம்பளத்தில் ஆறில் ஒரு பகுதியை, இந்த வருட புத்தக வேட்டையில் செலவளித்தேன்.

ஞாயிற்றுக் கிழமை சரியான கூட்டம். பலர் புத்தகங்களைவிட, சாப்பிடும் ஐட்டங்களின் மேலேயே ஆர்வமாயிருந்ததைக் காண முடிந்தது. வெளியே வரும்போது, வெளியேறும் கூட்டத்தாரின் கைகளில் புத்தக பார்சல்களைவிட PopCorn பொட்டலங்களும், டெல்லி அப்பளங்களும் அதிகமாயிருந்தன.

ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது இவைகளைப் பற்றி அல்ல. நேற்று ஒரு கடையில் புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த கடைக்குள் ஒரு குடும்பம் - அப்பா, அம்மா, ஒரு குழந்தை(நான்குஅல்லது ஐந்து வயதிருக்கும்), நுழைந்தார்கள். அம்மா ஒரு புத்தகத்தைப் பார்ப்பதற்காக கையிலெடுத்தார்கள். உடனே அந்தக் குழந்தை அந்தப் புத்தகத்தை, அவர் கையிலிருந்து பிடுங்கி பிரித்துப் பார்த்தது. பிரித்தவுடன் அந்தக் குழந்தை ஒரு வாக்கியம் உதிர்த்தது. உடனே அந்தப் புத்தகத்தை திரும்ப வைத்துவிட்டு அந்தக் குடும்பத்தினர், அடுத்தக் கடையை பார்க்க சென்றனர்.

அந்தக் குழந்தை உதிர்த்த வாக்கியத்தைக் கேட்டதும் நானும் என் நண்பனும் திடுக்கிட்டுவிட்டோம். எனக்கு பயங்கரக் கோபம், அந்தக் குழந்தை மீது இல்லை! அதன் பெற்றோர் மீது!! எனக்கு கோபம் வந்தா, நான் அதை எங்கே காட்டுவது? அதான் நம்ம வலைத்துணுக்கில் எழுதிட்டேன். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அப்புறம் அந்த குழந்தை உதிர்த்த முத்து என்னன்னா,

"அம்மா, இதுல தமிழ் இருக்கு, இது எனக்கு வேணாம்."

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.

Thursday, December 02, 2004

பின்னூட்டக் கோபம் தொடர்ச்சி

பிராம்மனியத்தைப் பற்றி கதறும் இவர் எவ்வளவு பெரிய ஜாதி வெறியர், என்பதை தனது எழுத்திலேயே காட்டிவிட்டார். வலைப்பதிவாளர் பிராம்மனியத்தை, தனது பதிவுகளில் நுழைப்பவராகவே(ஒரு பேச்சுக்கு) இருக்கட்டும். அவர் தனது சொந்தப் பதிவில்தானே அதை செய்கிறார். பின்னூட்டமிட்டவரைப் போல் அடுத்தவர் பதிவில் போய் சம்பந்தமேயில்லாமல், தனது ஜாதி வெறியை நுழைக்கவில்லையே. எதை எதைத்தான் ஜாதிவெறியோடு பார்ப்பது, எங்கேதான் ஜாதியை நுழைப்பது என்ற விவஸ்த்தையே இல்லையா?
"இவ்வளவு பேசுகிறாயே? நீயும் அவாளா?" என்று என்னைக் கேட்டாலும் கேட்பார். இப்பொழுதே பதில் சொல்லிவிடுகிறேன். நான் அவாள் இல்லை.

"மாதவன், அரவிந்த்சாமியைப் பற்றி குறிப்பிட்டவர், ஏன் விக்ரம், விஜய்யைக் குறிப்பிடவில்லை?" என்று கேட்கிறார். இந்தக் கேள்வி உங்களுக்கே சின்னப்பிள்ளைத்தனமாய் இல்லை?எல்லோருடைய விருப்பங்களும், ரசனைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும், இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் ஓழிய இப்படி ஒரு கேள்வி எழாது. வலைப்பதிவாளரின் ரசனைக்கு மாதவனையும், அரவிந்தசாமியையும் பிடித்திருக்கிறது, அதனால் அவர் அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் கேள்வி விக்ரம், விஜய்யை ஏன் அவருக்கு பிடிக்கவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு பிடித்த யாரையாவது பற்றி எழுதாமல் இருந்தால் கூடவா தப்பு? எனக்குகூடத்தான் நடிகர் விவேக்கை பிடிக்கும். அதற்காக இந்தப் பதிவில் போய் "கமலைக் கொண்டாடும் நீங்கள் ஏன் விவேக்கை கொண்டாட மறுக்கிறீர்கள்?" என்று நான் கேட்கலாமா?

கமலைக் காமசகாப்தம் என்கிறார். நடிகைகளைத் தள்ளிக்கொண்டு போகிறார் என்கிறார். இதைப் பற்றியெல்லாம் வலைப்பதிவாளர் பேசவே இல்லையே! கமலின் நடிப்புத் திறமையைப் பற்றித்தானே பேசியிருக்கிறார். பின்னூட்டம் இடுவதற்கு முன்பு பதிவில் எந்த விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறது என்ற தெளிவிற்கு வாருங்கள்.முதலில் பிரபலமானவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டிப்பார்க்கும் அநாகரிகத்தை விட்டொழியுங்கள்.

பெயரை மட்டும் அழகாக வைத்துக் கொண்டால் போதாது, வலைப்பதிவு எழுதுவதற்கு. ரொம்ப கோவமா இருக்கேன். அப்புறமா வாரேன்.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.

பின்னூட்டக் கோபம்

என்னடா கொஞ்ச நாளா கோபமே வரலையேன்னு பார்த்தேன். இந்த வாரம் Dondus dos and donts பதிவிலிருந்து போனச் சுட்டிக்குப் போய் பார்த்தபொழுது, உடம்புக்கு மேல(அதென்ன எப்பம்பாத்தாலும் மூக்குக்கு மேல) கோவம் வந்துட்டுது. அங்க ஒரு பின்னூட்டப் போரே நடந்திருந்தது. அந்தப் பதிவை முன்பே படித்திருந்தேன். ஆனால் அதற்கு வந்த பின்னூட்டங்களை படிக்கும் பாக்கியம்(?!?!) நேற்றுதான் கிடைத்தது. வலைப்பதிவாளர்(கமலைப் பற்றி) அவரது கருத்தைக் கூறியிருந்தார்.

அவரது கருத்தில் ஒரு பின்னூட்டவாதி சூப்பரா ஒரு தப்பு கண்டுபிடிச்சிருக்கார். வலைப்பதிவாளர் கமலை மகா சகாப்தம் என்று சொல்லி விட்டார். பின்னூட்டவாதியின் கருத்து கொஞ்சம்தான் மாறுதல், அதாவது கமல் ஒரு காம சகாப்தம். அதற்கு அவர் அத்தாட்சிக்கு கமலின் அண்டர்வேர்வரைப் போய்விட்டார். இந்த அளவுக்கு தனி மனித விமர்சனங்கள் வருவதைப் பற்றித்தான் போன துணுக்கிலேயே கூறியிருந்தேன். அவரது கோபத்துக்கு காரணம் என்னவென்று பார்த்தால், கமல் ஒரு பார்ப்பனராம். பதில் சொல்பவர்களையெல்லாம் 'நீங்கள் அவாளா?' என்று கேட்கிறார். அவாள் என்பதற்காகத்தான் வலைப்பதிவாளர் அந்தப் பதிவையே போட்டிருக்கிறார் என்கிறார். பாவம் அவருக்கு பதில் சொன்னவரும் அவாளாகப் போய் விட்டார். விட்டு வாங்கியிருக்கிறார்.

அவர் சொல்கிறார், ஜாதிப்பற்று காரணமாக பிராம்மனியத்தை வலுக்கட்டாயமாக வலைப்பதிவாளர், இந்த மாதிரி பதிவுகள் எழுதி நுழைக்கிறாராம். விக்ரமும், விஜய்யும் அவாள் இல்லை என்பதால்தானே அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்கிறார். அவாள், அவாள் என்று கதறுகிறார்.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.

Tuesday, November 23, 2004

இப்போதைய கோபம்

வலைத்துணுக்குகள் பலவற்றில் தனிநபர் விமர்சனம் பல சமயங்களில் தலை தூக்கி நிற்கிறது. உடனே இவற்றை எதிர்த்து ஒரு பத்து தனிநபர் விமர்சன பின்னூட்டங்கள்(பெரும்பாலும் வலைப்பதிவரைக் குறிவைத்து).

இவற்றையெல்லாம் படிக்கும்போது பயங்கரமா கோபம் வருதுங்க! பேசாம இதுக்கு ஒரு சென்சார் இருந்தா தேவலைன்னுகூட கோபத்தில சில சமயம் தோணுது(ஆனாலும் சென்சார் யோசனை எனக்கே உடன்பாடில்லை). நான் வழக்கமாகப் படிக்கும் வலைப்பதிவுகளில்கூட இந்த மாதிரி விமர்சனங்களைப் படிக்கும்போது, அந்த வலைப்பதிவர் மேல அது வரைக்கும் இருந்த மதிப்பு குறைந்து போகுது. எத்தனையோ பேர் இதைப் பற்றி எழுதிவிட்டாலும் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. இன்னும் சில வலைப்பதிவுகளில் சில நல்ல மேட்டர்கள் வரும்போது கூட, சில புல்லுருவிகள் மிகக் கேவலமாக பின்னூட்டமிடுகின்றனர். உதாரணம் நவன் பகவதியின் வலைத்துணுக்கில் சமீபத்தில் பதியப்பட்ட பின்னூட்டங்கள். ஐயா பின்னூட்டவாதிகளே! வலைத்துணுக்குகளில் வரும் ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால். அதைப் பற்றிய ஆரோக்கியமான விமர்சனத்தையோ, எதிர்ப்பையோ பதிய முடிந்தால் பதியுங்கள். அதை விடுத்து உங்களுக்கும் கணிணியில் தமிழ் எழுத தெரியும் என்பதால் அசிங்கமாக எழுதாதீர்கள். அப்படி அசிங்கமாக எழுத உங்களுக்கு ஆசையாயிருந்தால் அதற்கு வேறு தளங்கள் இருக்கின்றன. அங்கே போய் எழுதுங்கள். அடப் போங்கப்பா, மூடே அவுட் ஆகிவிட்டது!!

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.

Saturday, November 20, 2004

கோபிப்பவர்

எல்லோருக்கும் வணக்கம். எனது சமூக கோபங்களைப் பற்றி எழுத இந்த வலைத்துணுக்கை ஆரம்பித்திருக்கிறேன். நீங்களும் உங்களது கோபங்களை இந்த வலைத்துணுக்கில் Comment மூலம் கொட்டிவிடுங்கள். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளன் இல்லை. அதனால் எனது கோபங்கள் பல நியாயம் இல்லாமல் சின்னத்தனமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் அவற்றையெல்லாம் இங்கே கொட்டப் போகிறேன். உங்கள் கோபங்கள் ஏதாவதற்கு நான் மறுமொழியவில்லை என்றால், என் மீது கோபப்படாதீர்கள். ஏனென்றால் நான் மிகவும் கோபமாய் இருக்கிறேன்.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.
>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
Free Counter Weblog Commenting and Trackback by HaloScan.com